மொக்கை என்றோர் மந்திரச்சொல் ( THE NAME IS MOKKAI )

Written on by மொக்கைச்சாமி

மொக்கை அது ஒரு மந்திரச்சொல் , நம்மில் பலரும் தினமும் கடந்து செல்லும் பாதையில் இதயத்திற்கு இதமாய் , மனதிற்கு மதுரமாய் ஒலிக்கும் சொல் , மொக்கையின்றி அமையாது நல்உலகு ,

ஆம் மொக்கை மனித வாழ்வின் மகத்துவம் , ஆண்டி முதல் அடுக்கு மாடி அண்ணாச்சி வரை அனைவருக்கும் மிக பிடித்த சொல் இந்த மொக்கை ...... உளவியல் ரீதியில் மொக்கை என்பது ஒரு வித பேரின்பம் , பேரின்பம் ஆன்மீகத்தில் மட்டுமல்ல மொக்கையிலும் கிடைக்கும் .

பேரின்பம் பெற இனி நீங்கள் எங்களையும் அணுகலாம் . மொக்கையை மொக்கையாக மட்டும் பார்க்காமல் மொக்கைக்காக உயிர்தியாகம் செய்யவும் தயங்காத உடன்பிறப்புகளாலும் , ரத்தத்தின்ரத்தங்களாலும் நடத்தப்படுவதே நமது மொக்கை டைம்ஸ் .

மொக்கைதன் வளர்ச்சிக்காய் அனுதினமும் பல மொக்கை பதிவுகளை இவலைப்பூவிலிட்டு மொக்கைக்காய் வாழ்வோம் . உடல் மண்ணுக்கு உயிர் மொக்கைக்கு இனி ஒரு மொக்கை சொல்வோம் அதை எந்த நாளும் காப்போம்.

If you enjoyed this post Subscribe to our feed

No Comment

Post a Comment